தமிழ்நாடு
திமுகவில் இருந்து விலகுகிறாரா ஆர்.எஸ் பாரதி? ஆதங்க பேச்சால் பரபரப்பு
Published
2 months agoon
By
Shiva
திமுகவின் செய்தி தொடர்பாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கத்துடன் பேசியதை அடுத்து அவர் திமுகவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது கலைஞர் மு கருணாநிதியின் காலத்தில் இருந்த இருப்பவர் ஆர்எஸ் பாரதி என்பதும் ஆனால் அவருக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த விதமான பெரிய பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் வந்த நிலையில் தற்போது எம்எல்ஏ அமைச்சர் என்ன பெரிய பதவிக்கு சென்றுவிட்டனர். இதனால் பல வருடங்களாக திமுகவில் இருப்பவர்கள் எந்தவித பயனையும் அனுபவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் இடையில் வந்தவர்கள் பல பெரிய பதவிகளை அனுபவித்து வருவதாக திமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஆர்.எஸ்.பாரதி கூறியபோத், ‘எங்களுக்கு பின்னால் வந்தவர்களெல்லாம் எம்எல்ஏ எம்பி ஆகி விட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரே கட்சி ஒரே கொடி என இருந்தால் பதவி கிடைக்கவில்லை என்றும் உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல் உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து விட்டனர் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சை அடுத்து அவர் விரைவில் திமுகவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
You may like
பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல.. சுப்பிரமணியன் சுவாமி
அதிமுக, திமுக, விசிக, நாதக, எந்த கட்சி கூப்பிட்டாலும் செல்வேன்: காயத்ரி ரகுராம்
10 ஆயிரம் கோடி அல்ல, 1200 கோடி மட்டும் தான்.. திமுக எம்பிக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்
உதயநிதி மகன் வந்தாலும் ‘வாழ்க’ சொல்லுவோம்: அமைச்சர் கே.என்.நேரு
முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்!
திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்? சிதறுகிறதா அதிமுக?