கிரிக்கெட்

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பருக்கு ரூ.2 கோடி: முதல்வர் அறிவிப்பு

Published

on

By

சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என முதல்வர் அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி மிக அபாரமாக விளையாடியது போதும் அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் வெண்கலப்பதக்கதிற்கான போட்டியில் அற்புதமாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை இந்தியாவுக்காக பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் என்பவர் மிக அபாரமாக எதிரணியின் கோல்களை தடுத்து இந்தியாவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கல்வித் துறையில் அவருக்கு இணை இயக்குனர் பதவியையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மலையாள வீரர்கள் அனைவருக்கும் 5 லட்சம் பரிசு கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்திய ஆக்கி அணியின் வீரர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத்திய அரசிடமிருந்து பரிசுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு தனியாக ரூபாய் 2 கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version