இந்தியா
6 வருடத்தில் ரூ.1000 கோடி வணிகம்: இறைச்சி வணிகத்தில் உச்சம் சென்ற தொழிலதிபர்..!

இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக பலர் தற்போது சொந்த தொழில் செய்யவே ஆர்வம் கொண்டுள்ளனர். சொந்த தொழில் செய்தால் முதலில் ஒரு சில வருடங்கள் கடினமான காலமாக இருந்தாலும் அதன் பின்னர் தொழில் சூடு பிடித்துவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஐடி நிறுவனத்தில் வருடம் முழுவதும் வேலை பார்த்தாலும் கிடைக்காத வருமானம் ஒரு சில நாட்களில் தொழில் அதிபர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர் இறைச்சி வணிகத்தை தொடங்கி தற்போது ரூ.1000 கோடி வணிகம் செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.
அபய் ஹஞ்சுரா என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜம்முவில் இருந்து பெங்களூர் வந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த விவேக் குப்தா என்ற பட்டய் கணக்காளர் அவருக்கு நண்பர் ஆனார். இருவரும் தாங்கள் செய்துவரும் வேலையில் திருப்தி அடையவில்லை என்பதை உணர்ந்து கொண்டு அதன் பிறகு சொந்த தொழில் செய்ய முடிவு செய்தனர்.
முதலில் சொந்த நிறுவனத்தை தொடங்க இருவரும் கொஞ்சம் பயந்தாலும் அதன் பிறகு செயலி மூலம் வருங்காலத்தில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதனை அடுத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று இறைச்சிகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் செயலியை தொடங்கினார்.
முதலில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது 3100 தொழிலாளர்களைக் கொண்டு விரிவடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மாதம் ரூபாய் 80 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்றும் இந்நிறுவனத்தின் வருட வணிகம் ரூ.1000 கோடி என்றும் கூறப்படுகிறது.