சினிமா செய்திகள்

ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது.. உறுதி செய்த ராஜமவுளி!

Published

on

எஸ்.எஸ்.ராஜமவுளி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் 2022 மார்ச் 25-ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ராம் சரன், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1920-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்மை கதையின் கற்பனை கலந்த தழுவல் ஆகும்.

ஆர்ஆர்ஆர் படம் இதுவரையில் உலகம் முழுவதும் 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமவுளி, தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதை எழுதியவர் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் தான். அவருடன் ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை குறித்து விவாதித்துள்ளேன்.

அதற்கான கதையை அவர் தயார் செய்து வருகிறார். ஆனால் எப்போது ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் திரைப்படமாக உருவாகும் என தெரியவில்லை என ராஜமவுளி கூறியுள்ளார்.

 

இப்போது ராஜமவுளி மகேஷ் பாபு நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியனா ஜோன்ஸ் போன்ற ஒரு கதையை இயக்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version