இந்தியா

ரூ.2 லட்சம் கோடி நிறுவனத்தின் சி.இ.ஓ.. தினமும் ரூ.35,000 சம்பளம் பெறும் பெண்..!

Published

on

ரூ.2 லட்சம் கோடி மதிப்புடைய நிறுவனத்தின் சிஇஓ ஆக பணிபுரியும் பெண் ஒருவர் தினமும் 35 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கான வேலை கிடைப்பதற்கு பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் ரேவதி அத்வைதி என்ற பெண் பிளக்ஸ் என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் சிஇஓ ஆக பணிபுரிந்து வருகிறார் என்பதும் இவரது சம்பளம் தினமும் ரூபாய் 35,000 என்று கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ரேவதி அத்வைதி பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் 1990 இல் எம்பிஏ பட்டம் பெற்று பினிக்ஸ் நிறுவனத்தில் கலந்து 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள பிளக்ஸ் நிறுவனத்தின் கம்பெனியில் அவர் பணி செய்து வரும் நிலையில் அவரது ஒரு நாள் சம்பளம் 35 லட்சம் மேல் அதிகம் என்று கூறப்படுகிறது மேலும்ரேவதி அத்வைதி தற்போது 131 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ரேவதி அத்வைதி உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) மேம்பட்ட உற்பத்தித் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இணைத் தலைவராக உள்ளார். ரேவதி அத்வைதி, தற்போது, உபெர் மற்றும் Catalyst.org இன் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

55 வயதான ரேவதி அத்வைதி இந்தியாவில் பிறந்த அமெரிக்க வணிக நிர்வாகி. Flextronics என்று அழைக்கப்பட்டு தற்போது Flex என அழைக்கப்படும் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருக்கும் இவரது தலைமையில் தான் நிறுவனம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு முன்பு, ரேவதி அத்வைதி ஈட்டன் மற்றும் ஹனிவெல்லில் பல தலைமைப் பதவிகளில் பணியாற்றினார்.

Trending

Exit mobile version