இந்தியா
ரிலையன்ஸ் ஜியோவின் ஃபேமிலி பிளான்.. 4 பேருக்கும் சேர்த்து போஸ்ட்பெய்ட் ரூ.699 தான்..!

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிய போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்களை நேற்று அறிவித்தது. இந்த திட்டமானது 4 பேர் கொண்ட குடும்பம் ஜியோ பிளஸின் கீழ் ஒரு மாதத்திற்கு அதன் சேவைகளை இலவசமாக பெறலாம். இந்த திட்டத்தின்படி மாதத்திற்கு ரூ 399 என்ற அளவில் தொடங்குகின்றன. மேலும் ஒரு சிம்மிற்கு ரூ 99 என 3 கூடுதல் இணைப்புகளை அனுமதிக்கின்றன. அதாவது 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதாந்திர கட்டணம் ரூ. 696 (ரூ. 399 + ரூ. 99 x 3).
“ஜியோ பிளஸ் அறிமுகப்படுத்திய இந்த போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அற்புதமான புதிய பலன்கள் மற்றும் அனுபவங்களை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வேறு போஸ்ட்பெய்ட் பயனர்கள் இந்த சேவைக்கு மாறி கொள்ளலாம்.
புதிய திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மேலும் சில விஷயங்கள் இதோ:
ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் குடும்பத் திட்டமானது வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவிற்கு ரூ.399 இல் தொடங்குகிறது.
இரண்டாவது திட்டம் ரூ.799 இல் தொடங்குகிறது. இதில் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் 100ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இரண்டு திட்டங்களும் நீங்கள் 3 குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம்.
உங்கள் எண் ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபருக்குத் தகுதி பெற்றிருந்தால், நீங்கள் உண்மையிலேயே வரம்பற்ற இலவச 5ஜி டேட்டாவைப் பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான மொபைல் எண், நெட்பிளிக்ஸ், அமேசான், ஜியோடிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற சேவைகள் இலவசம்.
இந்திய மற்றும் சர்வதேச ரோமிங் அழைப்பிற்கு ஒரு நிமிடத்திற்கு ரு.1 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கான சந்தாதாரர்கள் ஜியோ ஃபைபருக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை.
போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பெற்ற பிறகு போஸ்ட்பெய்டு பயனர் மனம் மாறினால், ஜியோ அவர்கள் உடனடியாக திட்டத்தை ரத்து செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெறுவதற்கான முதலில் 70000 70000க்கு என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். உடனே உங்கள் போஸ்ட்பெய்டு சிம் இலவசமாக ஹோம் டெலிவரி செய்யப்படும். தேவைப்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு மேலும் 3 சிம் கார்டுகளைக் கோரலாம்.