ஆரோக்கியம்

உடல் கொழுப்பைக் குறைக்கும் சிகப்பு அரிசி!

Published

on

தென்னிந்தியப் பகுதியில் வாழும் மக்கள் அங்கு ஏற்படும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப அதிகம் சாப்பிடும் உணவு தானியமாக அரிசி இருக்கிறது. இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் உடலுக்குப் பல நன்மைகளைத் தருபவையாக இருக்கிறது.

உடலில் கெட்ட கொழுப்பு:

சிவப்பு அரிசியைச் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உணவில் இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவையுடன் சிகப்பு அரிசி சேர்த்துச் சாப்பிடுவது உடலில் கெட்ட கொழுப்பு கரைத்து நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும்.

உடல் எடை:

சிவப்பு அரிசி ஆரோக்கியம் அளிப்பதுடன் சர்க்கரை அளவையும், கொழுப்பைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை பராமரிக்கச் சிவப்பு அரிசி பயன்படுத்தப்படுகிறது.

நார்ச்சத்து:

அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நுரையீரல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது, இது தானாகவே ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது.

உடலில் ஆக்ஸிஜனின் மேம்பட்ட நிலை உங்கள் மனநிலை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. உடலிலிருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்றி, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி:

குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்புச் சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும். மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது.

சிவப்பு அரிசியில் “புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவைக் கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

ரத்த அழுத்தம்:

முப்பது வயதைக் கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

Trending

Exit mobile version