தொழில்நுட்பம்

இது ஒரு மினி ஐபோன்.. ரியல்மி அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்..!

Published

on

ரியல்மி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாடல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது ரியல்மி C55 என்ற மினி ஐபோன் அம்சத்துடன் புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி C55 இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி C55 மாடலில் 90Hz திரை மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட் அம்சம் உள்ளது.

64MP டூயல் கேமரா அமைப்புடன் ஐபோன் 14 ப்ரோ பாணியில் பேட்டரி சார்ஜிங் இண்டிகேட்டர் உள்ளதால் இந்த மாடலை மினி ஐபோன் என்றும் கூறலாம். ரியல்மி C55 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை அதன் நிர்வாகிகள் உறுதிசெய்துள்ளனர்.

ரியல்மி C55 ஒரு நேர்த்தியான, பிரீமியம் தோற்றமளிக்கும் தட்டையான முனைகள் கொண்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. இது இரண்டு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6.72-இன்ச் 1080p ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது.

ஃபோனின் பேட்டரியின் நிலை மற்றும் சார்ஜிங் மற்றும் டேட்டா உபயோகக் குறிகாட்டிகளைக் காட்டும் விட்ஜெட் உள்ளது. மேலும் இந்த மாடலில் MediaTek Helio G99 செயலி உள்ளது. 33W வேகமான சார்ஜிங் அம்சம், 8ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

5,000mAh பேட்டரி , போனின் பின்புறத்தில் 64MP பிரதான மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. மேலும் செல்ஃபிக்காக 8எம்பி ஷூட்டர் உள்ளது.

பேட்டரி C55 மாடல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான பேட்டரி UI 4.0 இல் இயங்கும் டூயல் சிம் 4G ஃபோன் ஆகும். இது பயோமெட்ரிக்ஸ் மற்றும் NFC இணைப்புக்கான பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

பேட்டரி C55 விலை இந்தோனேசியாவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13,500 மற்றும் ரூ. 16,000 என்ற விலையில் கிடைக்கும்.

Trending

Exit mobile version