வணிகம்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இதை செய்ய வங்கி செல்ல வேண்டிய அவசியமில்லை!

Published

on

உங்கள் வங்கி கணக்கிற்கான தனிநபர் அடையாள விவரங்களை வங்கி கிளைக்குச் சென்று புதுப்பிக்க திட்டமிட்டுள்ளீர்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.

வங்கி வாடிக்கையாளர்கள் KYC என அழைக்கப்படும் தங்களைப் பற்றிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை இனி வங்கி கிளைக்குச் சென்று புதுப்பிக்கத் தேவையில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ள விவரங்களில் முகவரியில் எந்த மாற்றமும் இல்லை எனில், பிற விவரங்களை மாற்றத் தேவையான ஆவணங்களை வங்கி கிளைக்குச் சென்று புதுப்பிக்க வேண்டாம்.

மின்னஞ்சல், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் அல்லது பிற டிஜிட்டல் வங்கி சேவைகளின் வாயிலாகவே KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் KYC விவரங்களைப் புதுப்பிக்க வாடிக்கையாளர்களைக் கிளைக்கு அழைக்கக் கூடாது எனவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கி வாடிக்கையாளரின் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மட்டும் வாடிக்கையாளர்களைக் கிளைக்கு அழைத்தால் போதும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

புதிதாக KYC விவரங்களைப் பெற வேண்டும் என்றால் வங்கி கிளைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைக்கலாம் அல்லது வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயல்முறை மூலமாக விவரங்களைப் பெறலாம்.

Trending

Exit mobile version