கிரிக்கெட்
சஞ்சு சாம்சனை பாராட்டிய ரவி சாஸ்திரி: எதற்காகத் தெரியுமா?

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் வெற்றி
இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலமாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றது.
ரவி சாஸ்திரி பாராட்டு
சஞ்சு சாம்சன் ஒரு கேப்டனாக முதிர்ச்சி அடைந்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சஞ்சு சாம்சன் தனது அணியில் இருக்கும் ஸ்பின்னர்களை நன்றாக பயன்படுத்தி வருகிறார். ஒரு நல்ல கேப்டன் மட்டுமே மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி, அவர்களை புத்திசாலித் தனமாக பயன்படுத்த முடியும். சஞ்சு சாம்சன் ஒரு நல்ல கேப்டனாக முதிர்ச்சி அடைந்துள்ளார் என பாராட்டி பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.