இந்தியா

இறுதிப்போட்டிக்கு தகுதி: சில மணி நேரங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிரக்ஞானந்தா

Published

on

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு சில மணி நேரங்களில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பொதுத்தேர்வு எழுதி உள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் நேற்று மோதினார். இந்த போட்டி நேற்று நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது. இதனை அடுத்து இன்று காலை 9 மணிக்கு அவர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார் என்பது குறிப்பிடதக்கது .

நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா முன்னிலை வகித்தார். இதனை அடுத்து நடந்த 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா முன்னிலை வகிக்க ஆட்டம் விறுவிறுப்பானது. இதனையடுத்து அனில்கிரி ஒரு ஆட்டத்தை முன்னிலை வகித்த நிலையில் 2-1 என்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நடந்த டைபிரேக் போட்டியில் அனில்கிரி தவறு மேல் தவறு செய்ததை அடுத்து பிரக்ஞானந்தா அட்டாக் விளையாட்டை விளையாடி வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி நள்ளிரவு 2 மணிக்கு முடிவடைந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு அவர் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறார். இதுகுறித்து அவர் கூறியபோது ’இதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை தாராளமாக நன்றாக தேர்வு எழுதி விடுவேன்’ என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

Trending

Exit mobile version