சினிமா
சிவகார்த்திகேயனுக்கு வேட்டு வைக்க ரெடியான சூப்பர்ஸ்டார்.. ஜெயிலர் ரிலீஸ் தேதி வந்தாச்சு!

சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென அதிரடியாக இன்று வெளியானது.
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் விஜய்யின் லியோவுக்கு போட்டியாக வரும் தீபாவளிக்கு இந்தியன் 2 படத்துடன் போட்டியாக வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவுக்கு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகப் போவதாக மினி டீசரை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#image_title
வாம்மா மின்னல் ரேஞ்சுக்கு ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன்லால் காட்சிகள் வந்து சென்ற நிலையில், காரில் இருந்து கண்ணாடி அணிந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறங்கி வரும் காட்சியுடன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.

#image_title
படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் குவாலிட்டி அளவுக்கு கூட இல்லையே என்றும் ரொம்பவே சுமாரான மேக்கிங்காக இருக்கிறது. முதலில் வெளியிட்ட முத்துவேல் பாண்டியன் இன்ட்ரோ டீசரே தரமாக இருந்தது என கலாய்த்து வருகின்றனர்.

#image_title
இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் போல டார்க் காமெடியில் ரஜினியை வைத்து தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
[youtube https://www.youtube.com/watch?v=1iPCrcZV6Os]