சினிமா செய்திகள்

விவேக் மறைவு குறித்து ரஜினிகாந்த் டுவிட்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன் விவேக் மறைவு குறித்து தனது இரங்கல் செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விவேக் ஆகிய இருவரும் ஷங்கரின் பிரமாண்டமான திரைப்படமான ’சிவாஜி’ படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதும் இந்த படம் இருவருக்குமே ஒரு மைல்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version