சினிமா செய்திகள்

பாலிவுட் பிரபலங்களுடன் இந்திய படமாக தயாராகும் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்!

Published

on

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பாகுபலி இயக்குநர் ராஜமெளலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் பிரஸ் மீட் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

பாகுபலி படத்திற்கு முன்னர் ராம்சரண் நடிப்பில் வெளியான மகதீரா படத்தை இயக்கி பிரபலமானவர் ராஜமெளலி. பாகுபலி படத்தின் இரு பாகங்களும் சுமார் 2000 கோடி வசூலை குவித்து உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்நிலையில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் பிரஸ்மீட் இன்று நடைபெற்றது.

பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட படக்குழுவினர், படத்தின் ரிலீஸ் தேதி 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி ரிலீசாகும் என்ற அறிவிப்புடன் பாலிவுட் பிரபலங்களான அஜய்தேவ்கன், ஆலியாபாட் மற்றும் கோலிவுட்டின் சமுத்திரகனி, மற்றும் இங்கிலாந்து நடிகை டேய்சி ஜோன்ஸ் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டியல் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க உள்ளதை ராஜமெளலி அதிகாரப்பூர்வமாக இன்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் அறிவித்தார்.

மேலும், 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் கதை குறித்தும் தற்போதே தகவலை வெளியிட்டுள்ளார் ராஜமெளலி. 1920-ம் ஆண்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட, சீதாராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் கதைதான் இந்த ஆர்ஆர்ஆர் என்ற சஸ்பென்ஸையும் அறிவித்து விட்டார்.

முன்னதாக ராமயாணம், ராவண காவியம் போன்ற இதிகாசங்களை ராஜமெளலி எடுக்கிறார் என்ற வதந்திக்கு இதனால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Trending

Exit mobile version