தமிழ்நாடு

ரூ.50ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைப்பு: இப்போழுது எவ்வளவு தெரியுமா?

Published

on

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது என்பது தெரிந்ததே.

ரூபாய் 10 ரூபாயாக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் திடீரென ரூபாய் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் சுமார் 700 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவா பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஏராளமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து உயர்த்தப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருந்த பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் ரூபாய் பத்து ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளதால தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version