சினிமா செய்திகள்
ஹிந்தி காஞ்சனா இயக்குவது உறுதி – ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளதை உறுதிபடுத்தியுள்ளார்.
காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களையும் வெற்றி படமாக்கிய ராகவா லாரன்ஸ், காஞ்சனா முதல் பாகத்தை லக்ஷ்மி பாம் என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து படப்பிடிப்பு வேலைகளை தொடங்கினார்.
அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய அனுமதி இன்றி படக்குழுவினர் வெளியிட்டதால் ராகவா லாரன்ஸ் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, இனிமேல் ஹிந்தி காஞ்சனாவை தான் இயக்கப்போவதில்லை என சொல்லிவிட்டு சென்னை புறப்பட்டார்.

இதனைத் தொடந்து தயாரிப்புத் தரப்பு ராகவா லாரன்ஸிடம் சென்னைக்கு வந்து மன்னிப்பு கேட்டு, சுமூக பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு உடன்பட்ட லாரன்ஸ், தற்போது மீண்டும் தான் அந்த படத்தை இயக்கப்போவதாக அறிவித்து, அவரது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார்.



















