சினிமா
ராதாரவியுடன் சின்மயி மீண்டும் மோதல்!

பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கொஞ்ச நாட்களுக்கு பேசும் பொருளாக இருந்தது.
இதனையடுத்து ராதாரவி வைரமுத்துவுக்கு ஆதரவாக சின்மயி புகாரை கண்டித்து விமர்சனம் செய்தார். பின்னர் சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கினார். இது மேலும் சர்ச்சையை உருவாக்கியது. சின்மயி ராதாரவி மீது விமர்சனங்கள் முன்வைத்தார். இந்நிலையில் தற்போது ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்ளும் டத்தோ பட்டம் பொய் என கூறி மோதலை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
டத்தோ பட்டம் மலேசியாவில் வழங்கப்படும் கௌரவமிக்க பட்டம். ராதாரவியின் இந்த டத்தோ பட்டம் தொடர்பாக சின்மயி தனது டுவிட்டரில் கூறியதாவது, நான் ஏற்கனவே மெலாகா மாநில அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதில், ராதாரவி என்ற நடிகருக்கு எந்த விருதினையும் அந்த மாநில அரசு வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை.
இந்தியாவில் உள்ள நடிகர்களில் ஷாருக்கானுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ராதாரவி இந்த பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாக பயன்படுத்தியுள்ளதால் நாங்கள் இந்த பிரச்சனையை உன்னிப்பாக கவனிக்கிறோம். எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி என அவர்கள் சின்மயிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு மீண்டும் ராதாரவியுடன் மோதலை ஆரம்பித்துள்ளார்.
















