சினிமா செய்திகள்
பிரியங்காவுக்கு மெழுகு சிலை – மேடம் டுசாட்ஸ் கெளரவம்!

சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு துறைகளில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகு சிலையை வைத்து கெளரவப்படுத்தி வருகிறது.
தற்போது, கோலிவுட்டில் சினிமா பயணத்தை தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் பிரியங்கா சோப்ராவிற்கு நியூயார்கில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஆளுயர மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
மேலும், வேறு எந்த பிரபலங்களுக்கும் இல்லாத வகையில், விரைவில் லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியக சிலைகளிலும் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட உள்ளன என்பதை அவரே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.












