இந்தியா

குடியரசு தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

Published

on

இந்திய குடியரசு தலைவரின் தேர்தல் தேதியை சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்ய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜூலை 21-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள வாக்குகள் 10,86,431 என்றும் இந்த தேர்தலில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிப்பார்கள் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். ராஜ்ய சபாவின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

Trending

Exit mobile version