சினிமா

அஜித்தை சந்திக்கவே முடியலை! 8 வருஷம் வெயிட் பண்ணி வெறுத்துட்டேன்; பிரேமம் இயக்குநர் புலம்பல்!

Published

on

நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு முறையாவது அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்லி படம் இயக்கி விட வேண்டும் என தவமாய் தவமிருந்து வருகிறாராம்.

பல முறை நடிகர் அஜித்தை சந்திக்க வேண்டும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் முறையிட்டும் எந்தவொரு பலனும் இல்லை என அல்போன்ஸ் புத்திரன் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு புலம்பித் தள்ளி இருக்கிறார்.

நேரம், பிரேமம், கோல்டு படங்களை இயக்கிய பிரபல இயக்குநருக்கே இப்படியொரு நிலைமையா என கேள்வி கேட்ட அந்த அஜித் ரசிகரே ஷாக் ஆகிவிட்டாராம்.

நிவின் பாலியை வைத்து நேரம் படத்தை ஹிட் அடித்த நிலையில், மீண்டும் நிவின் பாலியை வைத்து பிரேமம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வந்த அல்போன்ஸ் புத்திரம் பிரேமம் படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கோல்டு படத்தை இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டு இருந்தார்.

பிருத்விராஜ், நயன்தாரா நடித்த அந்த படம் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் ரிலீஸான பிறகு திரைக்கதை சொதப்பலாக இருந்த நிலையில், தியேட்டர்களில் ஓடவே இல்லை. சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து அல்போன்ஸ் புத்திரம் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், அஜித் ரசிகர் எழுப்பிய கேள்விக்குத் தான் இப்படியொரு பதிலை பிரேமம் இயக்குநர் கூறி உள்ளார்.

மேலும், தனக்கு வயதாவதற்குள் ஒரு முறையாவது நடிகர் அஜித்தை நேரிலாவது சந்தித்து விட வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கனவு என்றும் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version