ஆரோக்கியம்

பெண்கள் மது அருந்துவதால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுமா?

Published

on

ஆண்களைப் போலவே தற்போது பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை அதிகரித்து வருகிறார்கள் என்று சர்வேக்கள் கூறிவரும் நிலையில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மது அருந்துவதால் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் குழந்தையின்மை என்ற பிரச்சனை பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மது அருந்துபவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது ஈரல் தான். ஈரல் தன்னுடைய வேலையை செய்ய விடாமல் உள்ளே செல்லும் மது தடுத்து விடும். அதனால் காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் மது அருந்துபவர்களுக்கு முதலில் கோளாறு ஏற்படுவது ஈரல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மது அருந்துவதால் அவர்களது ஈரல் பாதிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக பெண்களிடம் ஆண் தன்மை அதிகமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் பெண்கள் தாய்மை அடையும் வாய்ப்பும் குறைந்து குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது. மது அருந்துவதால் தாய்மை அடையும் பெண்ணின் உடல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் இயல்பு, தோற்றம், செயல்பாடு, ஆரோக்கியம் என பல்வேறு விதமான பாதிப்புகளை தாய் மது அருந்துவதால் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நமது சந்ததி நன்றாக வளர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் தாய்மை அடைந்து இருக்கும் போதாவது பெண்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும்.

ஒரு சிலர் காஸ்ட்லியான வெளிநாட்டு மது அருந்தினால் ஒன்றும் செய்யாது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் உயர்தரம் மதுவாக இருந்தாலும் சாதாரண பட்டச்சாராயம் ஆக இருந்தாலும் சரி நமது உடல்நலத்திற்கு கேடானது. மதுவை எதிலாவது கலந்து குடித்தாலும் அல்லது கலக்காமல் கொடுத்தாலும் எந்த வகையிலும் மது உடலுக்குள் செல்வது தீங்கானது என்பதை பெண்கள் உள்பட அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அதேபோல் மது அருந்துவது மட்டுமின்றி கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் புகை பிடிப்பதையும் முழுமையாக நிறுத்திவிட வேண்டும். புகைப் பிடிக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமற்ற குழந்தை பிறக்கும் என்று பல சர்வேக்கள் உறுதி செய்துள்ளன.

Trending

Exit mobile version