சினிமா
பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போகவே இல்லையாம்?

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை யாரோ மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக அவர் மனைவி தெரிவித்திருந்த நிலையில், அவர், ஊட்டிக்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவராக இருந்த பவர்ஸ்டார் சீனிவாசன் லத்திகா எனும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தார். பல்வேறு சொத்து பிரச்சனை மற்றும் மோசடி புகார்களில் சிக்கி சிறைக்கும் சென்றார்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த தகவல் மீடியா மூலம் தமிழகம் முழுக்க பரவியது.
மேலும், அடுத்த சில தினங்களில் புகார் கொடுத்த அவரது மனைவி ஜூலியும் காணாமல் போனதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார், தொடர்பு கொண்டு பேசிய போது, ஊட்டியில், நிலப் பத்திரப்பதிவுக்கு சென்றதாகவும், தனது மனைவி கையெழுத்து தேவைப்பட்டதால், அவரையும் ஊட்டிக்கு அழைத்ததாகவும் பவர்ஸ்டார் தெரிவித்தார்.
போலீசாரிடம் தகவல் சொல்லாமல் ஜூலி ஊட்டிக்கு சென்றதாலும், ஜூலியிடம் சொல்லாமல் பவர்ஸ்டார் ஊட்டிக்கு சென்றதுமே இத்தனை குழப்பங்களுக்கு காரணம் என்று போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
தற்போது, பவர்ஸ்டார் அண்னாநகரில் உள்ள தனது விட்டிற்கு திரும்பிவிட்டார்.





