வேலைவாய்ப்பு
மத்திய பவர்கிரிட் கார்ப்பரேஷனில் 1,543 புதிய பணியிடங்கள் – ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்!

Powergrid Recruitment 2025:
மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில், 1,543 புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் களப் பொறியாளர் (Field Engineer) மற்றும் கள மேற்பார்வையாளர் (Field Supervisor) பதவிகளுக்கானவை.
இந்த வேலை ஒப்பந்த அடிப்படையில் 24 மாதங்களுக்கு வழங்கப்பட்டாலும், செயல்திறனைப் பொறுத்து 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
📌 தகுதிகள்:
களப் பொறியாளர் – எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவில் BE, B.Tech, B.Sc (Engg) பட்டம் + குறைந்தது 1 வருட அனுபவம்.
கள மேற்பார்வையாளர் – எலெக்ட்ரிக்கல்/சிவில் துறையில் டிப்ளமோ + குறைந்தது 1 வருட அனுபவம்.
இரு பதவிகளுக்கும் குறைந்தது 55% மதிப்பெண்கள் அவசியம்.
📌 தேர்வு நடைமுறை:
எழுத்துத் தேர்வு – இரு பதவிகளுக்கும்.
நேர்காணல் – களப் பொறியாளர் பணிக்கானது மட்டும்.
📌 சம்பள விவரம்:
களப் பொறியாளர் – மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை.
கள மேற்பார்வையாளர் – மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை.
📌 விண்ணப்பம்:
விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 17, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்கும் முறைக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: 👉 www.powergrid.in











