சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ – யார் யாருக்கு என்னென்ன வேடம்?…

Published

on

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பகுதிகளாக பிரித்து இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று தகவல்கள் வெளிவந்தன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. வாள் மற்றும் கேடயத்துடன் அந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், தோட்டாதரணி கலை இயக்கத்தில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், ஜெயமோகன் வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் நடிகைகளுக்கு என்ன வேடம் என்பது தெரியவந்துள்ளது.

வந்திய தேவன் – கார்த்தி
ஆதித்த கரிகாலன் – விக்ரம்
குந்தவை – திரிஷா
சுந்தர சோழன் – பிரகாஷ்ராஜ்
ஆழ்வார்க்கடியன் – ஜெயராம்
சின்னப் பழுவேட்டரையர் – பார்த்திபன்
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
நந்தினி – ஐஸ்வர்யா ராய்

Trending

Exit mobile version