தமிழ்நாடு
பொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு!

ஜனவரி 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வந்த பொங்கல் பரிசு, ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது தேர்தல் முடிந்து 2-ம் தேதி முடிவுகள் வெளியாகிவிடும். எனவே 9-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு பேக் செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.