தமிழ்நாடு

இன்று முதல் பொங்கல் பரிசு டோக்கன் .. டோக்கன் பெற்றதும் என்ன செய்ய வேண்டும்?

Published

on

தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.

அடுத்த மாதம் 2ஆம் தேதி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ள நிலையில் அதே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்க உள்ளனர்.

ரூபாய் 1000 பணத்துடன் வழங்கப்பட உள்ள இந்த பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 100 முதல் 200 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த டோக்கன்களில் எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வந்து பொங்கல் பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற முழு விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் பயனாளர்கள் டோக்கனை எடுத்துக்கொண்டு ரேஷன் கடைகளுக்கு சென்றால் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரே நேரத்தில் ரேஷன் கடையில் கூட்டம் கூடி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த டோக்கன் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு முந்திய நாளான போகி பண்டிகை தினத்திற்க்குள் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கன்களை கொண்டு செல்லும் நபர் பொங்கல் பரிசு பெறுவதற்காக ஒரு கைரேகை மற்றும் ரூபாய் 1000 பெறுவதற்காக ஒரு கைரேகை பதிவு என இரண்டு முறை கைரேகை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசு வாங்க செல்லலாம் என்பதும் ஆனால் கைரேகை வைப்பது மட்டும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version