தமிழ்நாடு

ரொம்ப நேரம் நிக்கிறோம்.. ஈரோடு கிழக்கில் மக்கள் புகார்.. என்னது மை அழியுதா? உண்மையா?

Published

on

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக மக்கள் சிலர் அதிரடி புகார்களை வைத்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடம் ஆக போகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு மார்க் கொடுக்கும் விதமாக தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கில் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவேரா திருமகன் இருந்தார். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3.00 மணி வரை 59.28% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஈவேரா திருமகனின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு போட்டியிடுகிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கி உள்ளார்.

மேலும் நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.இந்த நிலையில்தான் அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காலையில் இருந்து வரிசையில் காத்திருப்பதாகவும். வெயிலில் 2-3 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் வாக்களிப்பது சிரமமாக உள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று எப்படியும் வாக்கு பதிவு 70 சதவிகிதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் இந்த புகாரை வைத்து உள்ளனர். அதோடு காலையில் விரலில் வைக்கும் மை அழிந்து போவதாக புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த புகாரில் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version