ஆரோக்கியம்

மாரடைப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சனையை குறைக்கும் வேர்க்கடலை!

Published

on

வேர்க்கடலை ஊற வைத்துச் சாப்பிடுவதைச் சிலர் தவிர்க்கலாம். வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையைச் சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன.

வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுகள் நிறைந்துள்ளன.

வேர்க்கடலையின் நன்மைகள்:

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்றான், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.

எடை இழப்பு:

வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகமுள்ளதால் எடை இழப்புக்குச் சிறந்தது. தோலுக்குச் சிறந்தது. உடலில் கொழுப்புக்கான அளவை பராமரிக்க உதவுகிறது. அவை ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டை (பி.எம்.ஐ) பராமரிக்க உதவும் என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

வைட்டமின் ஈ இருப்பதால் இதயத்திற்கு நல்லது. தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

வேர்க்கடலையின் பயன்கள்:

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.

வேர்க்கடலை ஆண்மை பலம் பெருகப் பெரிதும் உதவி செய்கிறது. வேர்க்கடலையை பொதுவாகப் பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடுவாரை விட வேக வைத்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

இதனால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தருகிறது. இதனை உண்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சினை குறையும். இதயம் பலமாகும்.

புற்றுநோய்:

புற்றுநோய் அபாயத்தை 58 சதவீதம் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடுப்பு மற்றும் முதுகு வலி :

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைக்கவும். பின் அதைச் சாப்பிடுவதால் முதுகு வலியைப் போக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். அதற்கு நீங்கள் தினமும் 6-7 வேர்க்கடலையைச் சாப்பிட வேண்டும்.

நரை முடியிலிருந்து தப்பிக்க!

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும பராமரிப்புக்கும் கடலை எண்ணெய் பயனுள்ளதாக விளங்குகிறது. கடலையில் உள்ள பாலினால் ஆன்டி படிக்காகச் செயல்படுகிறது.

இது தேகத்துக்குப் பளபளப்பைத் தருவதோடு இளமையை மீட்டுத் தருகிறது. தலைமுடி உதிரும் பிரச்சினை உள்ளவர்கள் “வைட்டமின் இ” சத்து நிரம்பிய கடலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் முடி வலுவடைந்து நரை விழாமல் பாதுகாக்கும்.

Trending

Exit mobile version