சினிமா

ரஜினியின் புதிய படத்தை இயக்குபவர் இவர்தான்!… கசிந்த தகவல்…

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் 2020 தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டு கொரோனா காரணமாக 2021 தீபாவளிக்கு அதாவது ஒருவருடம் தள்ளி வெளியானது. இந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியானது. பல மாதங்களுக்கு பின்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டதாலும், தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதாலும் மக்கள் இப்படத்தை காண தியேட்டருக்கு சென்றனர். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை பெற்றும் முதல் 4 நாட்கள் இப்படம் நல்ல வசூலை பெற்றது.

annaatthe

ஆனால், இப்படத்திற்கு எமன் போல மழை வந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்தது. குறிப்பாக, அதிக வசூலை பெறும் சென்னையில் கனமழை காரணமாக அதிகமான கூட்டம் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படது. இதனால் அண்ணாத்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, எதிர்பார்த்த வசூலை இப்படம் பெறவில்லை.

இதைத்தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. புதிய படத்திற்கு அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினி ரூ.100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

pandiraj

அதேநேரம், இப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவிருப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது பாண்டிராஜ் பெயர் அடிபடுகிறது. பாண்டிராஜ் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தை இயக்கினார். தற்போது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

கிராமத்து கதை, குறைந்த பட்ஜெட், வெற்றி நிச்சயம் என்கிற ரூட்டில் பயணிக்கும் பாண்டிராஜையே ரஜினியின் படத்தை இயக்க வைக்கலாம் என சன் டிவி கருதுகிறதாம்.

இறுதி முடிவு ரஜினியின் கையில்…..

Trending

Exit mobile version