தமிழ்நாடு

ப சிதம்பரத்திற்கு ராஜ்ய சபா எம்பி பதவி: குடும்பத்திற்கு ஒரு பதவி விதி என்னாச்சு?

Published

on

தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி கிடைத்துள்ள நிலையில் அந்த பதவிக்கு ப சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி மட்டுமே என்ற தீர்மானம் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது ப சிதம்பரம் வீட்டில் இரண்டு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி பதவி காலியானதை அடுத்து திமுக கூட்டணிக்கு 4 எம்பி பதவியும், அதிமுக கூட்டணிக்கு 2 எம்பி பதவியும் கிடைக்கும் என்பது தெரிந்ததே. இதில் திமுக கூட்டணி ஒரு எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது.

அந்த ஒரு எம்பி பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் தற்போது ஒரு வழியாக ப சிதம்பரம் தான் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து ப சிதம்பரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது முக்கிய தீர்மானங்கள் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒரு பதவிதான் வழங்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

ஆனால் அந்த தீர்மானத்தை மீறி ஏற்கனவே மக்களவை எம்பியாக கார்த்தி சிதம்பரம் இருக்கும் நிலையில் அவருடைய தந்தை ப. சிதம்பரத்திற்கு தற்போது ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version