தமிழ்நாடு

ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு: ஒற்றை தலைமை விவகாரம் முடிவுக்கு வருமா?

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்னும் சில நிமிடங்களில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது இந்த விவகாரம் உச்ச கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி அதிமுக அலுவலகத்தில் இன்று காலை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதில் ஒரு சில தொண்டர்களுக்கு இரத்த காயம் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது ஒற்றை தலைமை விவகாரம் முடிவுக்கு வருமா? அல்லது இரட்டை தலைமையை தொடருமா அல்லது ஒற்றை தலைமையை ஒருவர் விட்டுக் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Trending

Exit mobile version