Connect with us

தமிழ்நாடு

திறந்தவெளி திரையரங்கம், பொதுஇடங்களில் இலவச வைஃபை: தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்தார். மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமான சிலவற்றை கீழே பார்க்கலாம்.

#image_title

* திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை 62,000 ஆயிரம் கோடியில் இருந்து 30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

* இலங்கை தமிழர்களுக்கு 3,949 வீடுகள் 223 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் 10 கோடி ரூபாய் செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* நகர்புற உள்ளாட்சிகளில் 1,424 கிலோ மீட்டர் மண்சாலைகள் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக 25,000 ரூபாய் வழங்கப்படும்.

* கோவையில் 9,000 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* 1,000 கோடி ரூபாய் செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

* தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் முதல்வரால் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 1000 புதிய பஸ்கள் வாங்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* பொது விநியோகத்திட்டத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சென்னை தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சியில் முக்கிய பொதுஇடங்களில் இலவச வைஃபை இணையதள சேவை வழங்கப்படும்.

* புதிதாக சென்னை, கோவை. ஓசூரில் தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும்.

* ஈரோடு, நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

* கிராமப்புறங்களில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?