தொழில்நுட்பம்

ஆன்லைன் இல் “சரக்கு”.! இனி டோர் டெலிவரியும் “இருக்கு”.!

Published

on

அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நம் நாட்டில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் நடக்கிறதென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய அசம்பாவிதங்களை குறைப்பதற்கு, மகாராஷ்டிரா அரசு ஆன்லைன் மதுபான விற்பனையை அறிமுகம் படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில மசோதாவின் அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் நிறுவப்பட்ட இ-காமெர்ஸ் நிறுவனங்கள், இந்த ஆன்லைன் விற்பனையில் களமிறங்க போவதாகவும் மதுபானங்களை குடிமகன்களுக்கு இலவச டோர் டெலிவரி சேவை மூலம் விற்பனை செய்யப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நெடுஞ்சாலை அருகில் உள்ள 3000 மதுக்கடைகள் மூடப்பட்டதாள் ஏற்பட்ட இழப்பை சரிகட்டவே இந்த திட்டத்தினை ஆறுமுகம் படுத்த போவதாக சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் காய்கறிகள் போல இனி மதுபானங்களை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அரசுக்கு ஏற்படும் இழப்புகளை சமாளிக்க, அரசு கையில் எடுக்கும் ஆயுதமாக மதுபானங்கள் மாறிவிட்டது. நாட்டுக்கு நல்ல குடிமகன்கள் தான் முக்கியம் என்று அரசு சொல்வதற்கு இதுதான் காரணமோ?

 

Trending

Exit mobile version