தமிழ்நாடு

செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு சிறை தண்டனை!

Published

on

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனமொன்றின் காசோலை திரும்பியது குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 5 வழக்குகளில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனை அடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தண்டனையை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய மனு அளித்து இருப்பதாகவும் இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிம், கமல் கட்சியுடன் கூட்டணி வைத்து 57 தொகுதிகளில் போட்டியிட்டு நேற்றுதான் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை என்ற தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version