இந்தியா

ஒரு மாத கரண்ட் பில் வெறும் 5 ரூபாய்: வைரலாகும் புகைப்படம்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு புல்லட் வெறும் 18 ரூபாய்க்கு வாங்கிய பில்லின் புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது 1940ஆம் ஆண்டு வெறும் 5 ரூபாய் மட்டுமே கரண்ட் பில் கட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக நடுத்தர மற்றும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு கூட ரூபாய் 1000 ரூபாய் கரண்ட் பில் வருவதை பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கரண்ட் பில் அதிகரித்துவிட்டதை அடுத்து கரண்ட் பில் என்பது ஒரு பெரும் சுமையாகவே மக்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1940 ஆம் ஆண்டு ஒரு முழு மாதம் மின்சாரத்தை பயன்படுத்தியதற்கான பில் தொகை வெறும் 5 ரூபாய் என காட்டப்படும் ஒரு மின் கட்டண பில் சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர்.

1940 ஆம் ஆண்டு அதாவது சுதந்திரம் அடைவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட இந்த பில் பம்பாய் எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிராம்வே CO. லிமிடெட் என்ற அரசு சாரா நிறுவனம் இந்த பில்லை வெளியிட்டுள்ளது. இந்த பில்லில் வெறும் 5 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கான மின் கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பில்லில் வெறும் ரூ 3 ரூபாய் 10 காசு மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதன் பின்னர் வரிகள் சேர்த்து ஐந்து ரூபாய் இருபது காசு என மொத்த பில் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்போது மின் கட்டணத்தை கையால் எழுதியதையும் இந்த பில்லில் பார்க்கலாம்.

இந்த பில்லின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து தற்போதைய மின் கட்டணத்தையும் இந்த பழைய மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 1940ஆம் ஆண்டு மின்சாரம் ஒரு மாதத்திற்கு ரூ.5 என இருந்த நிலையில் தற்போது ஒரு யூனிட்டிற்கு கிட்டத்தட்ட ஐந்து ரூபாய் என கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.

Trending

Exit mobile version