தமிழ்நாடு

இனிமேல் இந்த மதிப்பெண்கள் கிடையாது.. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சி!

Published

on

கல்லூரி விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு மையம் நடத்திவரும் நிலையில் இனிமேல் இந்த இந்த தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி விரிவுரையாளர்கள் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு இதுவரை வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில் இனிமேல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய விதிகளில் சீர்திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா என்பவர் பிறப்பித்த அரசாணையில் ’ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறுசீரமைக்கும் வகையில் 39 பரிந்துரைகள் அரசிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் அரசாணையாக பிறப்பிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் இதில் குறிப்பாக தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் என்பது ஆசிரியர் தேர்வு எழுதும் தேர்வர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வந்தது. அதாவது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப் பகுப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, பிஎட் படிப்புகளுக்கு தகுந்தவாறு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கும் முறை முதலில் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் மாற்றப்பட்டது. அதாவது ஆசிரியர் தேர்வில் 90 முதல் 104 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு 42 மதிப்பெண்கள், 105 முதல் 119 வரை பெற்றவர்களுக்கு 48 மதிப்பெண்கள், 120 முதல் 135 வரை பெற்றவர்களுக்கு 54 மதிப்பெண்கள், 136 முதல் 150 வரை பெற்றவர்களுக்கு 60 மதிப்பெண்கள் என்ற வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது திடீரென ஆசிரியர் தேர்வு வாரியம் இனிமேல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடையாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வைக்கப்படும் தேர்வில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version