Connect with us

உலகம்

மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை.. ஒருவர் கூட விண்ணப்பிக்காத அதிசயம்..!

Published

on

வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்கள் தற்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதை அடுத்து பலர் வேலை இழந்து உள்ளனர் என்பதும் ஏற்கனவே படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வேலையில் திண்டாட்டம் பெருகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து ஏதாவது ஒரு நிறுவனம் எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கும் நிலைக்கு இளைஞர்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஒரு வேலைக்கு மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையிலும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் என்ற கடற்கரைக்கு சற்று அப்பால் உள்ள கடலில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்காக ஆள் தேவை என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கடலில் அல்லது கடலில் உள்ள ஒரு பெரிய அமைப்பில் அமைந்திருக்கும் இந்த தொழிற்சாலையில் கிணறுகள் தோண்ட, எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்து எடுக்க மற்றும் சுத்திகரிக்க அதன் பிறகு அந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை நிலத்துக்கு கொண்டு வந்து சேமிக்க செய்யும் வேலைக்காக நபர்கள் எடுக்கப்படுகிறார்கள்.

இந்த பணிக்காக பணியமத்தப்படும் நபர்கள் தினமும் 36,000 அடிப்படை ஊதியத்துடன் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகள் தங்கி இரண்டு ஷிப்டுகள் வேலை செய்தால் அடுத்த ஆறு மாதத்தில் அவர்கள் வெளிநாட்டு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவ்வாறு நியமனம் செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாதம் ரூபாய் 4 லட்சம் என்ற சம்பள அறிவிப்பு வெளியிட்ட போதிலும் இந்த வேலைக்கு இன்னும் யாரும் விண்ணப்பம் செய்யவில்லை என தெரிகிறது. இந்த வேலைகள் சேர தகுதி உள்ள நபர்கள் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பயிற்சி நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும் என்றும் அதாவது அடிப்படை கடல் பாதுகாப்பு தூண்டல் மற்றும் அவசரப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் என்றும் கடல் சார் அவசர பயிற்சி முடித்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியாகிய 24 நாட்கள் ஆனபோதிலும் ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதன் பிறகு இன்னும் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது என்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் வேலையில் சேருவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வணிகம்2 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?