இந்தியா

பி.எச்.டி படிப்பிற்கு இனி முதுநிலை படிப்பு தேவையில்லை: யூஜிசி அறிவிப்பு!

Published

on

முதுநிலை படிப்பு படித்திருந்தால் மட்டுமே பிஹெச்டி என்ற ஆராய்ச்சி பட்டம் பெற முடியும் என்ற நிலையில் இருக்கும் நிலையில் தற்போது பிஎச்டி படிப்பில் முதுநிலைப் படிப்பு தேவை இல்லை என்று யுஜிசி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுநிலை பயிலாமல் நேரடியாக பி.எச்.டி படிப்பில் சேரும் புதிய திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக பி.எச்.டி படிப்பில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகால யூ.ஜி. படிப்புகளுடன் விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால பி.ஜி. படிப்பு அறிமுகமாகிறது என கூறியுள்ள யுஜிசி, 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் எப்போது விரும்பினாலும் இடையில் அதனை நிறுத்திவிட்டு, மீண்டும் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம் என யுஜிசி அறிவித்துள்ளது.

முதுநிலை படிப்பு இல்லாமல் நேரடியாக பிஎச்டி படிப்பில் சேரலாம் என்ற யூஜிசியின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version