Connect with us

வணிகம்

வளைகுடா நாடுகளில் உள்ள என்ஆர்ஐ-கள் இனி கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Published

on

துபாய், பபல் கம், சூவிங் கம், என்ஆர்ஐ, அபராதம், NRI, Be Aware, Fine, Before, Spitting, Bubble Gum, Chewing Gum, Dubai, chewing gum fine dubai, chewing gum in dubai metro, bubble gum in dubai

நிதி சட்டம் 2021-ன் கீழ் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் கூடுதலாக வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டி இருந்தார்.

சவுதி, ஐக்கிய அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக வேலைக்குப் பல இந்தியர்கள் செல்கின்றனர். இப்படி கூலி வேலைக்குச் செல்லும் என்ஆர்ஐகளுக்கு இந்தியாவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருமான வரி விலக்கு நிதி சட்டம் 2021-ன் கீழ் நீக்கப்பட்டுள்ளதாக டி.எம்.சி எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்ட நிர்மலா சீதாராமன், “வார்த்தைகளில் பின்வாங்கப்போவதில்லை, நிதிச்சட்டம் 2021-ன் கீழ் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் தொழிலாளர்களாகச் சென்று கடினமாக உழைத்து வேலை பார்க்கும் என்ஆர்ஐகளின் வருமானம் மீது கூடுதல் வரியை கொண்டு வரவில்லை.” என்று தெரிவித்து இருந்தார்.

The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.

மேலும் இது போல சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது, மக்களை தவறாக வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் உருவாக்குகிறது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார்,

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?