சினிமா
என் படத்துல அந்த மாதிரி சீனே இருக்காது; விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!

போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஆவண குறும்படப் போட்டிக்கு பரிசு அளிக்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் எனது படங்களில் சிகரெட் பிடிப்பது போன்றோ, அல்லது தண்ணி அடிப்பது போன்றோ காட்சிகள் வைத்ததே கிடையாது. இனியும் வைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
கல்லூரி மாணவர்களை தாண்டி பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியிலேயே போதைப் பொருள் சர்வ சாதாரணமாக புழங்கி வருவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
அதை தடுக்கும் நோக்கில் காவல்துறை தீவிர கட்டுப்பாடுகளை விதித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
சமீபத்தில் இதுதொடர்பாக குறும்பட போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது சென்னை காவல் துறை. இந்நிலையில், அந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் ஹீரோக்களுக்கும், இயக்குநர்களுக்கும் அந்த பொறுப்புணர்வு இயல்பாகவே இருக்கணும், முன்பெல்லாம் தம் அடிக்கிறதையும், குடிக்கிறதையும் ரொம்பவே கேஷுவலாக காட்டினார்கள். ஆனால், சமீப காலமாக அதை பெருமளவில் குறைத்து வருகின்றனர்.

#image_title
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஆரம்பத்தில் நோ ஸ்மோக்கிங், நோ ஆல்கஹால் கார்டே இல்லாத அளவுக்கு படம் இருந்ததற்கு சென்சார் போர்டில் பாராட்டினார்கள். அதே போல பாண்டிச்சேரியில் நானும் ரவுடி தான் படத்தை எடுத்தாலும் ஹீரோ குடிப்பது போல ஒரு காட்சியை கூட வைக்கவில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசி உள்ளார்.
ஏகே 62 படத்தின் வாய்ப்பை இழந்த நிலையில், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு செம காமெடியான படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாகவும், நயன்தாரா அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.