இந்தியா

பட்ஜெட்டில் இந்த கடன் அறிவிப்பு இருந்தால் மீண்டும் பாஜக ஆட்சி தான்.. நிர்மலா சீதாராமன் கணிப்பு

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் கடைசி பட்ஜெட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரவிருப்பதை அடுத்து தேர்தலுக்கு முன் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் போற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அமேசான் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நுழைவால் சிறு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறிய அளவில் வர்த்தகம் செய்பவர்களை ஊக்குவிக்கும் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்றும் அதாவது குறைந்த விலையில் கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசில் வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் மிகவும் எளிமையாக கடன் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் இதனால் கடன் வழங்கும் விதிகள் எளிதாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வங்கிகளில் லோன் வாங்க வேண்டும் என்றால் பல்வேறு விதிமுறைகளை அடைக்க வேண்டி நிலையில் சிறு வணிகர்கள் லோன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கோடிக்கணக்கில் லோன் வாங்குபவர்கள் மிக எளிதில் வாங்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்கும் விதிகளை தளர்த்தும் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வரும் என்றும் இதன் காரணமாக சிறை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அதனால் அவர்களின் குடும்பங்கள் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வாக்குகளை அளிக்கும் என்றும் இதனால் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வர ஆட்சியில் வாய்ப்பு ஒரு கணக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் எந்த அளவுக்கு மத்திய அரசுக்கு ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்காக மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் ஜிடிபி 9% வரை வரவேண்டும் என்றால் சிறு வணிகர்களின் முன்னேற்றம் அவசியம் என்பதையும் மத்திய அரசு புரிந்து வைத்துள்ளது. எனவேதான் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை அறிவிக்க போவதாகவும் இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் அதிகரித்து ஒன்பது சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இன்னும் ஓரிரு ஆண்டில் பெரும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் விவசாயிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தையும் எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் நிர்மலா சீதாராமனின் இந்த ஆண்டு பட்ஜெட் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு அறிவிப்புகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version