தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை: சிறையில் தற்கொலை முயற்சி!

Published

on

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்துவருவதாகக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன் இதில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், சிறையில் பாலியல் தொல்லை உட்படப் பல சித்ரவதைகளை நிர்மலா தேவி அனுபவித்துவருகிறார். துப்பாக்கியை காட்டிச் சுட்டு விடுவதாக அவரை காவல் துறையினர் மிரட்டியுள்ளனர்.

நிர்மலா தேவி கடுமையான தாக்குதலால் காயமடைந்துள்ளார். அந்த காயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால், அவரை இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை என தெரிவித்த அவரது வழக்கறிஞர், நிர்மலா தேவி சித்திரவதை செய்யப்படுவது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம் என்றார். மேலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய உத்தரவை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Trending

Exit mobile version