ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்: உலக சாதனை செய்த பெண்!

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்: உலக சாதனை செய்த பெண்!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தது உலக சாதனையாக கருதப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தாமாரா என்ற பெண்மணி சமீபத்தில் கருவுற்றார். இவரது கரு வளர வளர வயிறும் மிகப்பெரியதாக மாறிக்கொண்டே இருப்பதை அறிந்து ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கலாம் என்று தாமாரா மற்றும் அவருடைய கணவர் சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து தாமாராவுக்கு பத்து குழந்தைகள் பிறந்தது. ஏழு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் தாமாரா என்ற தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து இது உலக சாதனை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக அமெரிக்காவில் நாட்டியா என்ற பெண்மணி கடந்த 2009ஆம் ஆண்டு 8 குழந்தைகளை பெற்றெடுத்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது என்றும் தற்போது பத்து குழந்தைகள் பிறந்தது மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com