டிக்டாக் உள்பட 8 செயலிகளுக்கு மீண்டும் அனுமதி: அமெரிக்க அதிபர் உத்தரவு!

டிக்டாக் உள்பட 8 செயலிகளுக்கு மீண்டும் அனுமதி: அமெரிக்க அதிபர் உத்தரவு!

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது டிக்டாக் உள்ளிட்ட 8 செயலிகளுக்கு தடை விதித்தார். இந்த தடையை தற்போது தற்போதைய அதிபர் ஜோ பைடன் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் டிக்டாக், விசாட் உள்ளிட்ட எட்டு செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பதும், இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் டிக்டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடையை நீக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்குபின் டிக் டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண்டும் அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக தளங்கள் விரைவில் செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளதை அடுத்து இதே போன்று இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிலும் தடை உத்தரவை திரும்ப பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com