மாலி நாட்டில் பிரதமர், ராணுவ அமைச்சர் கைது: பெரும் பதட்டம்

மாலி நாட்டில் பிரதமர், ராணுவ அமைச்சர் கைது: பெரும் பதட்டம்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட நிலையில் அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா என்பவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையாக பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மாலி நாட்டில் ராணுவத்தின் மேற்பார்வையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அமைச்சரவை சீரமைப்பு நடந்ததாகவும் அதில் ராணுவ அமைப்பில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த மாற்றம் நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களில் அந்நாட்டின் பிரதமர் மொக்தார் உவானே என்பவர் கைது செய்யப்பட்டார். பிரதமரை அடுத்து ராணுவ அமைச்சர் சொலேமான் டவ்கோர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மாலி நாட்டில் பிரதமர், ராணுவ அமைச்சர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருவதோடு முக்கிய பதவிகளையும் ராணுவம் கைப்பற்றி வருவதால் இடைக்கால அரசுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com