பிட்காயினை பணமாக பயன்படுத்தலாம்: அறிவிப்பு வெளியிட்ட உலகின் முதல் நாடு!

பிட்காயினை பணமாக பயன்படுத்தலாம்: அறிவிப்பு வெளியிட்ட உலகின் முதல் நாடு!

பிட்காயினை இன்னும் உலகின் பல நாடுகள் அங்கீகரிக்காத நிலையில் உலகில் முதல்முதலாக ஒரு நாடு அதனை தங்கள் நாட்டில் பணமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாடு மத்திய அமெரிக்க நாடான சால்வடார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமெரிக்க நாடான சால்வடார் நாட்டில் மற்ற நாணயங்கள் போலவே பிட்காயினையும் மக்கள் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் நயீப் புக்ளே என்பவர் இதுகுறித்து பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்ததையடுத்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் 90 நாட்களில் இது அமலுக்கு வரும் என்றும் சால்வடார் அரசு தெரிவித்துள்ளது.

பிட்காயினை அதிகாரபூர்வமாக நாணயம் ஆக்குவதன் மூலம் தங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் மற்ற நாடுகளுடன் வர்த்தக ரீதியான அணுகுமுறை எளிதாக முடியும் என்றும் அதிபர் நயீப் புக்ளே தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களில் பிட்காயின் சந்தை மதிப்பு திடீரென 6 சதவீதம் உயர்ந்து உள்ளது என்பதும் தற்போது 35 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்களில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com