இந்திய பிரதமர் முதலைக்கண்ணீர்: நியூயார்க் டைம்ஸ் தலைப்பு செய்தியை வெளியிட்டதா?

இந்திய பிரதமர் முதலைக்கண்ணீர்: நியூயார்க் டைம்ஸ் தலைப்பு செய்தியை வெளியிட்டதா?

இந்தியா பிரதமர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி பதிவு செய்துள்ளதாக சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று பிரதமர் மோடி மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஒரு கட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களை நினைத்து கண்ணீர் சிந்தினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், நேற்று முன்தின பதிப்பில் இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார் என்ற செய்தியை வெளியிட்டு அதற்கு கீழே முதலை ஒன்று கண்ணீர் வடிப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்ததுபோல் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து மோடி முதலை கண்ணீர் விடுகிறார் என்று விமர்சனம் செய்தது போல் நியூயார்க் டைம்ஸ் பதிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த புகைப்படத்தை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பகிர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் விளக்கமளித்துள்ளது. கடந்த 21ம் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதலையின் புகைப்படம் வெளியிடப்படவில்லை என்றும் பிரதமர் மோடியின் செய்தியும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டோஷாப் மூலம் அது ஒரு சிலரால் மாற்றப்பட்டு வைரலாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com