லம்போர்கினி காருக்காக 40 நாட்கள் உண்ணாவிரம்: 33வது நாளில் மருத்துவமனையில் அனுமதி!

லம்போர்கினி காருக்காக 40 நாட்கள் உண்ணாவிரம்: 33வது நாளில் மருத்துவமனையில் அனுமதி!

விலை உயர்ந்த லம்போர்கினி காருக்காக 40 நாட்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த இளைஞர் ஒருவர் 33வது நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்பாவே நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு லம்போர்கினி காரை பரிசாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவருடைய நண்பர்கள் சிலர் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருந்தால் கடவுள் லம்போர்கினி கார் பரிசாக கொடுப்பார் என கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அந்த இளைஞர் லம்போர்கினி காருக்கு ஆசைப்பட்டு 40 நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் விரதத்தை தொடங்கினர்.

கடவுள் கண்டிப்பாக தனக்கு லம்போர்கினி காரை பரிசாக கொடுப்பார் என்றும் அந்த காரை தனது காதலிக்கு பரிசாக அளிக்கலாம் என்றும் அவர் விடாப்பிடியாக சாப்பிடாமல் இருந்தார். அவருடைய பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறியும் அவர் கேட்கவில்லை. இந்தநிலையில் 33வது நாளில் திடீரென அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com