இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு புதிய நிபந்தனை: ஜப்பான் அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு புதிய நிபந்தனை: ஜப்பான் அரசு அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அது 2 லட்சமாக குறைந்திருந்தாலும் இந்தியாவை உலக நாடுகள் அச்சத்துடனே பார்த்து வருகின்றன.

ஏற்கனவே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகள் இந்தியர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளன. இந்த நிலையில் தற்போது ஜப்பான் நாடும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டுக்கு வருபவர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஏற்கனவே இருந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டு, இந்தியாவிலிருந்து வந்தவர்களையும் தனிமைப்படுத்தும் காலத்தை ஜப்பான் அரசு 10 நாட்களாக உயர்த்தி உள்ளது.

இந்த பத்து நாட்கள் காலகட்டத்தில் மூன்று முறை பரிசோதனை நடத்த இருப்பதாகவும் மூன்று முறையும் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர்கள் ஜப்பான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இந்த புதிய நிபந்தனை காரணமாக இந்தியாவில் இருந்து ஜப்பான் செல்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com