கைகொடுக்க வந்த பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த இளைஞர்! வைரல் வீடியோ

கைகொடுக்க வந்த பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த இளைஞர்! வைரல் வீடியோ

பிரான்ஸ் நாட்டின் அதிபரை கன்னத்தில் அறைந்த இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகுவார் என்பதும் பொதுமக்களிடம் அவ்வப்போது கைகொடுத்து இயல்பாக இருப்பவர் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டு மக்களை அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்தித்தபோது அவர் பலருக்கு கை கொடுத்துக் கொண்டே வந்தார்.

அந்த நிலையில் இளைஞர் ஒருவர் அதிபருக்கு கை கொடுப்பது போல நடித்து திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த இளைஞனையும் அவருடன் வந்திருந்த இன்னொரு நபரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிபரை கன்னத்தில் அடித்தது ஏன் என்பது குறித்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை இருவரிடமும் நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபரை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பாதுகாப்பு அதிகாரிகள் இனிமேல் பொதுமக்களை அதிபர் சந்திக்கும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com